Categories
இந்திய சினிமா சினிமா

பிக்பாஸ் பிரபலம் தற்கொலை – பெரும் அதிர்ச்சி…!!

கன்னட பிக்பாஸ் பிரபலம் ஜெயஸ்ரீ தற்கொலை செய்துள்ள சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக திரையுலகத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. இவர் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திரையுலகம் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் வேலை எதுவும் செய்யாமல் வீட்டில்  இருந்து வந்துள்ளார். இதனால் அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதையடுத்து ஜெயஸ்ரீ தன்னுடைய வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளது இன்று மதியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து அறிந்த கன்னடத் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் வேலை மட்டுமே வாழ்க்கை இல்லை என்று சினிமா ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் கலந்து கொண்டவர் ஆவார். மேலும் பேஸ்புக்கில் “நான் விலகுகிறேன், இந்த உலகத்திற்கு மன அழுத்தத்திற்கும் குட் பை” என்று போஸ்ட் செய்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஜெயஸ்ரீ தற்கொலை செய்யப்போவதாக எண்ணி பதறியுள்ளனர். அதன்பிறகு ஜெயஸ்ரீ அந்த போஸ்டை நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |