பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் வெளியான ஜோக்கர் ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்த ரம்யா பாண்டியன் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இதைத்தொடர்ந்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார்.
இவர் தற்போது முன்னணி நடிகர் சூர்யா நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியனுக்கு கண்ணில் லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும், இன்னும் ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரம்யா பாண்டியன் கூடிய விரைவில் நலம் பெற வேண்டும் என்று அவரது ரசிகர்களும் பிராத்தனை செய்து வருகின்றனர்.