பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் சிம்பிள் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியை பெற்றது. நான்கு சீசன்களை கடந்து முடிந்துள்ள இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதேபோல் இந்த நான்கு சீசன்களில் பங்கேற்ற பிரபலங்களும் தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். மேலும் பலர் தங்களது புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்ற லாஸ்லியா தனது புகைப்படத்தை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தற்போது கருப்பு நிற சேலை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். லாஸ்லியாவின் இந்த சிம்பிள் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
https://www.instagram.com/p/COVH_5hBabI/?igshid=72kaiya6u1di