Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலத்தின் தந்தை – திடீர் மரணம்…!!

பிரபல பிக்பாஸ் நடிகரின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ்-1 நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கினார். இந்த சீசனில் பிரபலமானவர் நடிகர் ஆரவ் ஆவார். இவர் பிக் பாஸ்-1 நிகழ்ச்சியில் முதலிடத்தை பிடித்து பிரபலமானார். இதையடுத்து அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார். பிக்பாஸ் பிரபலம், மாடல் மற்றும் நடிகர் என பல துறைகளில் பிரபலமான இவரின் தந்தை இன்று காலமானார்.

மாரடைப்பு காரணமாக அதிகாலை 1.30 மணிக்கு நடிகர் ஆரவ்வின் தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவரது தந்தையின் இறுதிச்சடங்கு நாகர்கோவில் வைத்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில்தான் மற்றொரு பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியாவின் தந்தை கனடாவில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |