பிக் பாஸ் தொகுப்பாளரான கமல் ஹாசன் அசீமை திட்டினால் ஜனனிக்கு என்ன பிரச்சனை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 – ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அசீம் சகப் போட்டியாளரான ஆயிஷாவை போடி என்று திட்டியுள்ளார். பின்னர் டால் ஹவுஸ் வாசலில் தனலட்சுமியை தள்ளிவிட்டு போடி என்று திட்டியுள்ளார். இதனை அடுத்து திருநங்கையான ஷிவின் கணேசனை கிண்டல் செய்துள்ளார். இதனைக் கண்ட பிக் பாஸ் ரசிகர்கள் அசீம்-க்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் கமலஹாசன் அசீமை கடுமையாக எச்சரித்ததுடன் கண்டித்தார். அப்போது அவர் கண்டித்து டோஸ் கொடுக்க கொடுக்க ஷிவினும், தனலட்சுமியும் வேணும் வேணும் உனக்கு நல்ல வேணும் என்று கூறி சிரித்தார்கள். அதனை கண்ட ஜனனிக்கு கோபம் வந்து தனலட்சுமியையும், ஷிவினையும் பார்த்து முறைத்தார். எனவே விஷப்பாட்டிலான ஜனனிக்கு ஏன் கோபம் வருகின்றது என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.