Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸ் 6” வழக்கமான ஸ்டைலுக்கு மாறிய ஜிபி முத்து….. கடுப்பான தனலட்சுமி..‌‌..!!!!

“பிக் பாஸ் சீசன் 6”  தனலட்சுமி, ஜி.பி.முத்து இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சி அமோகமாக துவங்கியுள்ளது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக அறிமுகமில்லாத நபர்களாக உள்ளனர். “சரவணன் மீனாட்சி” உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களின் மூலம் பிரபலமான ரச்சிதா மகாலட்சுமி இந்த சீசனில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

“பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கொலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவ்வா மற்றும் தனலெட்சுமி  20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஜி.பி.முத்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகின்றார்.

“டிக்டாக்” மூலம் பிரபலமான இவரின் யூடிப் வீடியோக்கள் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பேமஸ் ஆனவர் தான் ஜி. பி. முத்து. இவரின் லெட்டர் படிக்கும் வீடியோக்களுக்கு தனியொரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். கடந்த வாரம் துவங்கிய இந்த சீசனில் ஆரம்பம் முதலே சண்டை தூள் பறக்க துவங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து சாம்பார் விஷயத்தில் மகேஸ்வரிக்கும் , தனலக்ஷ்மிக்கும் சண்டை வந்த போது தனது பாணியில் ஜி.பி.முத்து கிண்டலடித்துள்ளார்.

மேலும் அவரது டிரெண்டிங்கான செத்த பயலே… நார பயலே டைலாக்கை பேச வைத்து அழகு பார்க்கின்றனர் மற்ற போட்டியாளர்கள். இதையெல்லாம் கவனிக்கும் தனலட்சுமி ஜி.பி.முத்துவை பார்த்தாலே காண்டு ஆகுது. அவர் நாரதர் வேலை பார்த்து கொண்டு, அனைவரையுமே அந்த வேலையை பார்க்க வைக்கின்றார் என கூறுகின்றார். இதனால் விரைவில் ஜி.பி.முத்து, தனலட்சுமி இடையே சண்டை வெடிக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது.

Categories

Tech |