பிக் பாஸ் 6 நடிகர் கமல் ஹாசனை கடுப்பேத்திய ஜி. பி. முத்து இணையத்தில் வைரலாகும் வீடியோ.
கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதற்கிடையே Grand Opening நேற்று ஒளிப்பரப்பானது. இந்த நிகழ்ச்சியின் முதல் நாளாக பிக் பாஸ் வீட்டிற்குள் Youtube பிரபலம் ஜி.பி. முத்து சென்றார். அதன்பின், அசல் கோளாறு, ராபர்ட், அசீம், ஷிவின் கணேசன் என தொடர்ந்து 20 போட்டியாளர்களும் உள்ளே சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து ஜி.பி. உள்ளே சென்ற பின்னர் சில நேரம் அவர் தனியாகவே பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தார். ஜி.பி. முத்து தனியாக இருந்தால் தனக்கு மிகவும் பயம் என்று அவர் கூற அதை ரசிகர்கள் நகைச்சுவையாக ரசித்தனர்.
https://twitter.com/purushothamanAM/status/1579280877858668544?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1579280877858668544%7Ctwgr%5Edd2fc75c7a9500f33260ec428c79a36de2ca1eee%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fgp-muthu-reason-for-kamal-angry-in-bigg-boss-6-1665369659
இதனைத் தொடர்ந்து ஜி.பி. முத்துவிடம் நடிகர் கமல் கூறியதாவது, “டெக்னிக்கல் கோளாறு காரணமாக நாளை தான் அனைவரும் வருவார்கள், இன்று நீங்கள் மட்டும் தான் தனியாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார். இதனால் பதற்றமடைந்த ஜி.பி.முத்து, என்னால் தனியாக இருக்க முடியாது, யாரையாவது அனுப்புங்கள் என்று கமலிடம் கூறினார். கமல் பல விதத்தில் ஜி.பி.முத்துவை கலாய்த்து பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது, ஆதாம், ஏவாள் குறித்து பேசி, ஏவாள் வரவரைக்கும் ஆதாம் காத்திருந்தது எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து பாருங்க என்று கமல் கூறினார். இதற்கு ஜி.பி. முத்து ஆதாமா அது யாரு? என்று கேட்க சற்று கமல் கடுப்பானார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.