நாடு முழுவதும் 5ஜி இணைய சேவை கடந்த சனிக்கிழமை அன்று தொடங்கப்பட்டது. ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் 5ஜி சேவையை தொடங்க உள்ளது. ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் 5G ஃபோன் வைத்திருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஸ்மார்ட் போன் வாங்கும் அனைவருமே 5ஜி போன் வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில் 4G சிம்மில் இருந்து 5Gக்கு மாற்றி தருவதாக கூறி, முறைகேடுகள் நடப்பதாக தொலைத் தொடர்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 4G சிம் பயனாளர்களை தொடர்பு கொள்ளும் சிலர், உங்கள் சிம்மை 5Gஆக அப்டேட் செய்ய உள்ளோம். இதனால் உங்கள் சிம்மிற்கு ஒரு OTP எண் வரும், அதை சொல்லும்படி கூறுகின்றனர். சொன்ன உடன் அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்படுகிறது. இப்படி எந்த ஒரு நிறுவனமும் OTP எண்களை கேட்காது, மக்களே ஏமாற வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.