வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இதனால் நாளை முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை தென்மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.
குமரி கடல் பகுதியில் இன்று முதல் 20ஆம் தேதி வரை பலத்த காற்று மணிக்கு 35 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.