நாட்டின் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எதிர்க்கட்சிகள் இதுதொடர்பாக விமர்சித்தும், குற்றம்சாட்டியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனாலும் விலையேற்றம் அடுத்தடுத்து உயர்ந்த வண்ணமே இருக்கின்றன.
பெட்ரோல் விலையும் இதே போல் உயர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் விமான எரிபொருள் விலையும் உயர்ந்து இருந்தது. இந்நிலையில் விமான எரிபொருள் விலையை தொடர்ந்து விமான டிக்கெட்டுகளை விலையை மத்திய அரசு ஏப்ரல் மாத இறுதியில் விமான கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பிப்ரவரி 11 க்கு பின் குறைந்தபட்ச கட்டணம் 10 சதவீதமும், அதிகபட்ச கட்டணம் 30 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது