நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனால் பல மாநிலங்களில் இரவு நேர முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மாநிலங்கள் மீண்டும் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தமிழகம் உள்ளிட்ட கொரோனா அதிகரிக்கும் மாநிலங்கள் தடுப்பு நடவடிக்கையை கடுமையாக்கி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.