தொடர் கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு தற்போது வினாடிக்கு 1150 கன அடியாக நீர் வரத்து உள்ளது . நீர்வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் புழல் ஏரியிலிருந்தும் இன்று பிற்பகல் 3 மணியளவில் வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
எனவே சாமியார் மடம், பாபா நகர் மணலி, நாரபாரி குப்பம் வடகரை, கொசப்பூர் பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். உபரி நீர் வெளியேறுவதால் கால்வாய் ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது . குடிநீருக்காக புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 159 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.