அமெரிக்காவிலுள்ள அலஸ்கா மாகாணத்தின் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி நேற்று புதன்கிழமை 10.15 மணிக்கு 4 மைல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் கண்டறியப்படும் அளவுக்கும் பின்னரும் எடுக்கப்படும் அளவுகள் மாறுபட்டுள்ளது. முதலில் அமெரிக்காவின் புவியியல் மையம் 7.1 ரிக்டர் அளவில் 35 கிலோ மீட்டர் ஆழத்திற்கு நடந்திருப்பதாக கணக்கிடப்பட்டது.
இதன் பிறகு ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் இந்த நிலநடுக்கத்தை 8.1 ரிக்டர் அளவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நடந்திருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளது. அமெரிக்கா சுனாமி எச்சரிக்கை அமைப்பு அமெரிக்கா பசிபிக் பிரதேசங்களான குவாம் மற்றும் வடக்கு மரினா போன்ற பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.