வங்க கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. நேற்று இரவு 10.58 மணிக்கு தொடங்கி 3.58 ணிக்கு புயல் முழுவதுமாக கரையை கடந்தது. நிவர் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறியது. மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி, விழுப்புரத்தில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. பல்வேறு இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது.
நிவர் புயல் காரணமாக பெய்த தொடர் மழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாலாற்றின் அருகே உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்கள் இன்று இரவுக்குள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவுறுத்தியுள்ளார்.