Categories
மாநில செய்திகள்

BIG ALERT: இன்று இந்த 16 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு…. அலர்ட் மக்களே…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நவம்பர் 02ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன்கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது தெரிவித்துள்ளது.

Categories

Tech |