பவானிசாகர் அணைக்கு வழக்கத்திற்கு அதிகமாக வெளிநாட்டு பறவைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
பவானிசாகர் அணைக்குஅதிக அளவில் வந்துள்ள வெளிநாட்டு பறவைகளின் வரத்தால் அணையானது அழகிய நிலையில் காட்சி தருகிறது சத்தியமங்கலம் தாலுகாவில் அமைந்திருக்கும் பவானிசாகர் அணையானது வனப்பகுதியை ஒட்டி இருக்கிறது இங்கு கோடை காலங்களில் வரும் பறவைகள் மற்றும் விலங்குகளை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கமாகும்
கோடை காலத்தை முன்னிட்டு இம்முறை வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் வந்திருக்கின்றன ஆஸ்திரேலியா சைபீரியா மற்றும் இந்தியாவின் வட மாநிலங்களில் இருந்தும் பலவிதமான பறவைகள் வந்து இருப்பதால் அவற்றை பார்ப்பதற்காக ஆர்வத்தோடு பொதுமக்கள் இங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.