பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் முக்கிய நடிகை விலகுவதாக செய்தி வெளியாகியுள்ளது.
‘பாரதிகண்ணம்மா சீரியல்’ விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று. இந்த சீரியலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஷினி இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவருக்கு பட வாய்ப்புகள் வந்துள்ளதால் இந்த சீரியலை விட்டு விலகுவதாகவும் கூறப்படுகிறது.