ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கர்ணன்’ படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தைப் பார்க்கும் பலரும் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் கர்ணன் படத்தை பார்த்து வியந்து போன திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் ஐபிஎஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படம் குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில், “கர்ணன் நியாயமற்ற அநீதிக்கு எதிராக எதிர்கிறான். பார்வையாளர்களை பிரதிபலிக்கச் செய்யும் சக்தி வாய்ந்த படம். நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படம் கர்ணன்” என்று பதிவிட்டுள்ளார்.
karnan resist and rise against unfairness and injustice,
make the audience pause and reflect. powerful film! #karnan
நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படம். #கர்ணன்— Vijayakumar IPS (@vijaypnpa_ips) April 12, 2021