Categories
கிரிக்கெட் விளையாட்டு

அபாரமான வெற்றி…. சிறந்த கிரிக்கெட் வீரர்கள்… கவுரவிக்க ஐ.சி.சி. பரிந்துரை…!!

ரிஷப் பண்ட் மற்றும் ஜோ ரூட் பெயர்களை சிறந்த கிரிக்கெட் வீரர்களாக ஐ.சி.சி பரிந்துரை செய்துள்ளது.

சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து மாதந்தோறும் கவுரவிக்க ஐ.சி.சி முடிவு செய்துள்ளது. அதன்படி ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்துள்ளார். இவர் பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியில் 2-வது இன்னிங்சில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் விளாசியுள்ளார். அதோடு சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் அணி இரண்டாவது இன்னிங்சில் 97 ரன்கள் எடுத்துள்ளார்.

இவரால் இந்தியா பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி பெற்றதால் ஐ.சி.சி ரிஷப் பண்ட் பெயரை ஐ.சி.சி பரிந்துரை செய்திருக்கிறது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜோ ரூட் என்பவர் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 228 ரன்கள் எடுத்தும் இரண்டாவது டெஸ்டில் 186 ரன்கள் எடுத்தும் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார். எனவே ஜோ ரூட் இலங்கை தொடரை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்ததால் இவரது பெயரையும் ஐ.சி.சி பரிந்துரை செய்திருக்கிறது.

Categories

Tech |