இதுகுறித்து அமைச்சர் கூறுகையில் , சீனாவில் இருந்து தமிழகம் திரும்பிய 242 பேரு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். மேலும் கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை நம்பி பீதியடைய வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தைப் பொருத்தவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை , பொதுமக்கள் சுகாதாரத் துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுங்கள் என்றும் அவர்தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து தமிழகம் வந்த 242 பேரும் தமிழக சுகாதாரத்துறை நேரடி தொடர்பில் உள்ளனர். அவர்களை தொடர்ந்து 28 நாட்கள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.திருவண்ணாமலை கிருஷ்ணகிரியில் கொரானோ பாதிப்பு என்ற வதந்தியை நம்ப வேண்டாம் . தமிழகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் , கேரளா எல்லையில் முழு பரிசோதனை மேற்கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.