பெங்களூருவில் இருந்து கடத்தப்பட்ட ஐந்து வயது பெண் குழந்தை இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பெங்களூருவில் இருந்து கடத்தப்பட்ட ஐந்து வயது பெண் குழந்தையை போலீசார் நேற்று மீட்டனர். இதனையடுத்து கர்நாடக போலீசார் உடன் இன்று நாகர்கோவில் வருகை தந்த குழந்தையின் தாய் கார்த்திகாவிடம் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பத்ரிநாராயணன் குழந்தையை ஒப்படைத்தனர். இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.