கொய்யாபழம் அதிகளவு சத்துக்களை கொண்ட ஒரு அருமையான பழம் .
விலை மலிவாக கிடைக்கும் கொய்யாப்பழம் அதிக அளவு நார்ச்சத்து, வைட்டமின் சி, ஏ, இ , போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களையும் கொண்டது . கொய்யாவில் அதிகமாக நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலைத் தீர்க்கும் வல்லமை கொண்டுள்ளது.

கொய்யாவை அடிக்கடி சாப்பிடும் போது தொப்பை குறையும் மற்றும் நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மைக்கு தீர்வாகவும் உள்ளது . தோல் சுருங்குவதை குறைக்கிறது . கண் கோளாறுகள் சரியாகிறது .

வைட்டமின்களும், தாதுச்சத்துக்களும் நிறைந்துள்ளதால் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது . உடம்பிற்கு குளிர்ச்சியை அளிக்கிறது . இதில் மெக்னீசியம் உள்ளதால் நரம்புத்தளர்ச்சியை சரிசெய்யவும் மருந்தாக பயன்படுகிறது. கொழுப்புச் சத்து குறைவாக உள்ளதால் பசியை கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

இதிலுள்ள வைட்டமின் சி, சளி மற்றும் இருமலுக்கு தீர்வாகிறது . உடலிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது .வாயுத்தொல்லை, வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு ஆகியவற்றிற்கு கொய்யா ஒரு சிறந்த நிவாரணி .நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பழம் . குடல் புண்ணை ஆற்றும் வல்லமை கொண்டது.