Categories
உலக செய்திகள்

இத்தனை நாட்களாக நீடிக்கும் என்று நினைக்கவில்லை… உக்ரைன் போர் குறித்து பெலாரஸ் அதிபர் கருத்து…!!!

உக்ரைன் போர் இத்தனை நாட்களாக நீடிக்கும் என்று தான் நினைக்கவில்லை என பெலாரஸ் நாட்டின் அதிபர் கூறியிருக்கிறார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 70 நாட்களை தாண்டி தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் போர் இத்தனை நாட்களாக நீடித்து கொண்டிருக்கும் என நினைக்கவில்லை என்று பெலாரஸ் நாட்டின் அதிபரான அலெக்சாண்டர் லுகாஷென்கோ கூறியிருக்கிறார்.

இதுபற்றி, அலெக்சாண்டர் மேலும் தெரிவித்ததாவது, இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நான் பல நடவடிக்கைகளை செய்தேன். எந்த போரையும் நாங்கள் ஏற்கவில்லை. உக்ரைன்-ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்று கூறியிருக்கிறார்.
ரஷ்யா- உக்ரைன் நாடுகளுடன் பெலாரஸ் நாடு எல்லைப்பகுதியை பகிர்ந்து கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியதிலிருந்து பெலாரஸ், ரஷ்யாவிற்கு தான் ஆதரவாக இருந்து வருகிறது. பெரலாரஸ் அதிபர் அலெக்சாண்டர், ரஷ்ய அதிபர் புடினின்  நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |