பெலாரஸ் நாட்டின் அதிபர், உக்ரைன் படை தங்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
உக்கரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் நான்கு மாதங்களை தாண்டி நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பெலாரஸ் நாட்டின் அதிபரான அலெக்சாண்டர் லுகாஷென்கோ, உக்ரைன்-ரஷ்ய போரில் நாங்கள் ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவிப்பதால் உக்ரைன் ராணுவம் தங்கள் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
எனினும், உக்ரைன் படையினரால் ஏவப்பட்ட ஏவுகணைகளை, தங்கள் படைகள் தாக்கி அழித்துவிட்டது என்று தெரிவித்திருக்கிறார். மேலும், 3 தினங்களுக்கு முன் இதே போன்று தங்கள் ராணுவ படைகளை நோக்கி உக்ரைன் தாக்குதல் நடத்த முயற்சித்தது, உக்ரைனின் இந்த செயல் தங்களை ஆத்திரமூட்டுகிறது என்று கூறியிருக்கிறார்.