பெய்ஜிங் குளிர்கால பாரா ஒலிம்பிக் தொடக்க விழாவில் கலந்துகொண்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
சீனத் தலைநகரான பீஜிங்கில், இந்த வருடத்திற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டி கடந்த மாதம் 4-ந் தேதி அன்று தொடங்கி 20-ந் தேதி வரை நடந்தது. அதனையடுத்து, குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டி நேற்று முன்தினம் தொடங்கி வரும் 13ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது.
தற்போது ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளை சேர்ந்த வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த குளிர்கால பாரா ஒலிம்பிக் தொடக்க விழாவில் கலந்துகொண்ட உக்ரைன் வீரர்களை சீன அரசு சார்பாக உற்சாகமாக வரவேற்றுள்ளனர். கண்கவர் வான வேடிக்கைகளும் கலைநிகழ்ச்சிகளும் நடந்திருக்கின்றன.