இந்தியாவின் எல்லைப் பகுதிக்கு உட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ஆம் தேதி இரவு இந்திய மற்றும் சீன ராணுவத்தினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்த நிலையில் சீன ராணுவத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது. இந்த மோதலால் இருநாடுகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு தனது படைகளை எல்லைகளில் குவித்தனர். இதற்கிடையில் இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.
இந்த நிலையில் சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ கடந்த வியாழக்கிழமை அன்று எதிர்பாராத பயணமாக இந்தியா வந்துள்ளார். கல்வான் மோதலுக்குப் பின்னர் சீன மந்திரி இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். இந்த பயணத்தின் போது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் இருவரையும் சீன வெளியுறவு துறை மந்திரி வாங் யீ சந்தித்து பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை வாங் யீ சீனா திரும்பியுள்ளார். இதற்கிடையில் சீன வெளியுறவு மந்திரி வாங் யீ நரேந்திர மோடியை சந்திக்க விரும்பியுள்ளர். அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதற்கு எல்லைகளில் உள்ள படைகளை திரும்பப் பெறாத நிலையில் மோடியை சந்திக்க முடியாது என்று மத்திய அரசு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் பதவியேற்பு விழாவுக்கு நரேந்திர மோடி சென்றிருப்பதாக மத்திய அரசு சீன வெளியுறவுத்துறை மந்திரியிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சீன வெளியுறவுத்துறை மந்திரியின் கோரிக்கையை மறுத்த சம்பவம் இருநாடுகளுக்கு இடையிலான விரிசலை காட்டுவதாக கூறபடுகிறது.