Categories
உலக செய்திகள்

தர்மம் எடுக்கும் பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்…. லாட்டரியில் வென்ற தொகை…. வாழ்க்கையை மாற்றிய சம்பவம்…!!!

ஸ்பெயின் நாட்டில் வங்கிக்கு வெளியில் இருந்து தர்மம் கேட்கும் பெண் ஒருவருக்கு லாட்டரியில்  1.3 மில்லியன் டாலர்கள் பரிசுத்தொகை கிடைத்திருக்கிறது.

ஸ்பெயின் நாட்டின் புளோரிடோ மாகாணத்தில் இருக்கும் வங்கியின் முன்புறமும் அதற்கு அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டின் வாசலிலும் தர்மம் எடுத்து வரும் ஒரு பெண் புகையிலை கடை ஒன்றில் லாட்டரி டிக்கெட் ஒன்றே வாங்கி இருக்கிறார். பொழுதை கழிப்பதற்காக அடிக்கடி அந்த கடைக்கு சென்று அங்கு செல்பவர்களிடம் லாட்டரி சீட்டில் முதலீடு செய்வாராம்.

எனினும், இந்த தடவை அவர் வாங்கிய லாட்டரி சீட்டில் 12,71,491 யூரோக்கள் பரிசுத்தொகை கிடைத்திருக்கிறது. தான் பரிசு தொகையை வென்றதை உணர்ந்த அந்த பெண், உடனடியாக தான் டிக்கெட் வாங்கும் கடைக்கு சென்று, “நீங்கள் எனது வாழ்க்கையை முழுமையாக்கி விட்டீர்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |