Categories
சினிமா தமிழ் சினிமா

ரிலீசுக்கு முன்பே…. ‘கர்ணன்’ படத்தை பாராட்டினார் ரஜினி…. தாணு பேட்டி…!!!

ரிலீசுக்கு முன்பே ‘கர்ணன்’ திரைப்படத்தை ரஜினிகாந்த் பாராட்டினார் என்று தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘கர்ணன்’. இத்திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்களும் திரை பிரபலங்களும் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷை பாராட்டி வருகின்றனர்.இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு சமீபத்தில் அளித்த பேட்டியில், முன்னணி நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தினை ரிலீசுக்கு முன்பே பார்த்து பாராட்டினார் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, ரஜினிகாந்த் ரிலீசுக்கு பின்தான் படங்களை பார்ப்பார். ஆனால் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக அவர் ஐதராபாத் செல்ல இருப்பதால் ரிலீஸுக்கு முன்னரே அவரை நான் கர்ணன் படத்தை பார்க்க கேட்டுக் கொண்டேன். அதன்படி அவர் கர்ணன் திரைப்படத்தை பார்த்தார்.இதை தொடர்ந்து அவர் தனக்கு இப்படம் பிடித்திருப்பதாக கூறி படக்குழுவினர் அனைவரையும் பாராட்டினார் என்று தாணு கூறியுள்ளார்.

Categories

Tech |