Categories
தேசிய செய்திகள்

“இதுக்கு மேல கடன் வாங்க முடியாது”… குடும்பச் செலவுக்காக… சிறுநீரகத்தை விற்ற போக்குவரத்து ஊழியர்..!!

குடும்பம் நடத்த பணம் இல்லாத அரசு ஊழியர் ஒருவர் தனது சிறுநீரகத்தை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பேருந்து போக்குவரத்து சேவைக்கு தடைவிதித்தது கர்நாடக அரசு. ஊரடங்கு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் கர்நாடக போக்குவரத்து துரை திண்டாடியது. மத்திய அரசின் வழிகாட்டுதல் படி கர்நாடகாவில் பேருந்துகள் மீண்டும் இயங்க ஆரம்பித்தாலும் ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவை தொகை வழங்கப்படவில்லை.

குறைந்த அளவிலான சம்பளம் வழங்கப்படுகிறது என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தநிலையில் அனுமந்தா என்பவர் தனது தாய் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவனது காலத்தில் கடன் மேல் கடன் வாங்கி கட்ட முடியாமல் திண்டாடி வந்துள்ளார். இதனால் தனது சிறுநீரகத்தை விற்று கடனை அடைத்து உள்ளார். அரசு போக்குவரத்து துறையின் ஊழியராக பணியாற்றி வந்த அனுமந்தா 16 ஆயிரம் சம்பளம் பெற்று வந்தார். கொரோனா ஊரடங்கு இப்பிறவியில் அனுமந்தாக்க சம்பளம் வழங்கப்படவில்லை.

இதனால் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்த அனுமந்தா மீண்டும் வேலைக்கு சென்றாலும் ரூபாய் 3500 மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சொற்ப தொகையை கொண்டு சிரமப்பட்ட அவர் குடும்பத்தை நடத்த தனது சிறுநீரகத்தை விற்றுள்ளார். எனது குடும்பத்தைக் காப்பாற்ற என் சிறுநீரகத்தை விற்று விட்டேன் என்று டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். குடும்ப செலவிற்காக போக்குவரத்துக்கழக ஊழியர் ஒருவர் தனது சிறுநீரகத்தை விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Categories

Tech |