பீட்ரூட் சூப் செய்ய தேவையான பொருட்கள்:
பீட்ரூட் – கால் கிலோ
பெரிய வெங்காயம் – ஒன்று
உருளைக்கிழங்கு – 1
எலுமிச்சம்பழம் – பாதி
புதினா – சிறிதளவு
சீரகம் – 1/4 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
பீட்ரூட் மற்றும் உருளைக் கிழங்கை தோல் நீக்கி எடுத்து கொள்ளவும். பெரிய வெங்காயத்தை சிறியதாக நறுக்கி எண்ணெயில் தாளித்து வேக வைத்து கொள்ளவும்.
மிக்ஸி ஜாறில் தோல் நீக்கிய பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு, வதக்கிய வெங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.அதனுடன் எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும்.
அடுப்பில் கடாயை அரைத்த விழுது, உப்பு, தண்ணீர் தேவைக்கேற்ப சேர்த்து நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி கிரீம் புதினா சேர்த்து பருகவும்.இப்போது பீட்ரூட் சூப் ரெசிபி தயார்.