Categories
மாநில செய்திகள்

தருமபுரி, ஈரோடு, பெரம்பலூர் மருத்துவமனைக்கு புதிய டீன்களை நியமித்தார் பீலா ராஜேஷ்!

அரசு மருத்துவக்கல்லூரிகளில் பணியாற்றி வந்த பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கும் வகையில், தருமபுரி, ஈரோடு, பெரம்பலூர் உள்ளிட்ட மூன்று மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தற்காலிக புதிய டீன்களை நியமனம் செய்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் பூவதி, தருமபுரி மருத்துவக்கல்லூரி டீனாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் மணி, ஈரோடு மருத்துவக்கல்லூரி டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் தீரணிராஜன், பெரம்பலூர் மருத்துவக்கல்லூரி டீனாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தனது பணியை சிறப்பாக செய்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு இடையே இத்தகைய முக்கிய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து அவ்வப்போது ஊடகங்கள் மற்றும் மக்களுக்கு தெளிவுப்படுத்தி வரும் பீலா ராஜேஷ், அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறார். முன்னதாக தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை செயலாளர் தெளிவாகவும், தன்னம்பிக்கையடனும் ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பது பாராட்டிற்குரியது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |