கணவனை மனைவியே தனது காதலனை வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த தம்பதியினர் பாலமுருகன் மணிமேகலை. இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகள் ஆத்தூரில் வசித்து வரும் நிலையில் பாலமுருகன் பெங்களூரில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். அவ்வப்போது விடுமுறைக்கு ஆத்தூர் வந்து குடும்பத்தினரை பார்த்து செல்வது வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் எட்டு மாதங்களுக்கு முன்பு மணிமேகலை தனது இரண்டாவது பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
ஆனால் குழந்தையை பார்த்த பாலமுருகன் தன்னைப் போன்று குழந்தை இல்லை என்றும் அவர்களது ஊரை சேர்ந்த மணிகண்டனை போல் இருப்பதாகவும் கூறி மணிமேகலையிடம் தகராறு செய்துள்ளார் .ஆனால் அதற்கு மறுநாளிலிருந்து பாலமுருகன் காணாமல் போயுள்ளார்.இதனால் பாலமுருகனின் மைத்துனர் சந்தேகம் கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரித்து வந்த காவல் துறையினருக்கு பல உண்மைகள் தெரிய வந்துள்ளது. அதாவது அதே ஊரை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் மணிமேகலைக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்துள்ளது.
பாலமுருகன் மணிமேகலையிடம் சண்டையிட்டு சென்றதும் மணிகண்டனுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து பாலமுருகனை மணிகண்டன் பின்தொடர்ந்து சென்று தனது சகோதரர் உதவியுடன் கொலை செய்ததோடு சுடுகாட்டில் எரிந்து தடயத்தையும் அளித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் மணிமேகலை, மணிகண்டன் மற்றும் அவரது சகோதரரான தனசேகர் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.