கொரோனா நோய்தொற்று, பணி மற்றும் முதுமை ஆகியவற்றால் பெரும்பாலான நேரங்களில் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் அமெரிக்க முதியவர்களின் வீடு தேடி சென்று பசியாற்றி வருகிறது இந்த நிறுவனம்.
அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் வசிக்கும் மக்களின் 6 ஒருவர் 65 வயதை கடந்த புதியவர்களாக இருக்கின்றனர். இது நியூயார்க் மாகாணத்தின் மக்கள் தொகையில் 60% ஆகும். கொரோனா பெரும் தொற்று, முதுமை காரணமாக புதியவர்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தனிமையில் வசிக்கும் பெரும்பாலான முதியவர்கள் தாமாக உணவு சமைத்து உன்ன முடியாத சூழ்நிலையிலும் இருக்கிறார்கள்.
இதனால் ஏற்கனவே தனிமையில் வாடும் முதியவர்கள் பசியை வாழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனால் அவர்களின் பசிப்பிணியை தீர்க்கும் விதத்தில் சிட்டி மீல்ஸ் ஆன் வீல் சேர் என்ற தொண்டு நிறுவனம் இவர்களின் பசியை ஆற்றி வருகிறது. இந்த நிறுவனம் தனிமையில் வாழும் முதியோர்களின் வீடுகளுக்கு சென்று சுடச்சுட உணவை வழங்கி வருகிறது. கொரோனா தொற்று நோய் பறவ தொடங்கியதிலிருந்து இந்த நிறுவனம் 25 லட்சம் பேருக்கு இந்த நிறுவனம் உணவு வழங்கியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குனர் கூறுகையில் நியூயார்க்கில் ஐந்தில் ஒரு முதியவருக்கு தற்போது உணவு தேவைப்படுகிறது. தொற்றுநோய் பரவ தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு நாளும் 50,000 வரை உணவு வழங்கி வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறோம். அதில் 8 லட்சம் அவசர கால தேவைக்கு வழங்கப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி வாசிகள் பெரும்பாலான நேரங்களில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் எனக்கு அவர்கள் கொண்டுவரும் உணவுதான் பசியைப் போக்குகிறது என்று கூறுகின்றனர்.