Categories
சினிமா தமிழ் சினிமா

“தீபாவளியில் அழகிய பெண் குழந்தை” இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கும் பிரபல நடிகர்….. ரசிகர்கள் வாழ்த்து…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் தலைமுடியை பார்த்து பலரும் கிண்டல் செய்ததாக யோகி பாபு சில பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் அந்த தலைமுடி தான் தற்போது படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்று தந்ததாக கூறினார். நடிகர் யோகி பாபு அஜித், விஜய், ரஜினி உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து காமெடி ரோல்களில் நடித்து வருகிறார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நடிகர் யோகி பாபுவுக்கு மஞ்சு பார்கவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில், நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. தீபாவளி பண்டிகையின் போது நடிகர் யோகி பாபு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்ததுள்ளது. மேலும் ரசிகர்கள் பலரும் யோகி பாபுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |