Categories
மாநில செய்திகள்

அடிதடி!…. கட்டையால் மூக்கு உடைய தாக்கிக் கொண்ட நிர்வாகிகள்… ரணகளமான காங்கிரஸ் அலுவலகம்… பெரும் பரபரப்பு…..!!!!

சென்னையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் சத்யபவனில் இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியை சந்தித்து நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை மாற்ற வேண்டும் என்று கடிதம் கொடுப்பதற்காக சிலர் வந்துள்ளனர். அப்போது ஜெயக்குமாருக்கு ஆதரவாகவும் சிலர் குரல் கொடுத்தனர். இதனால் கட்சி அலுவலகத்தில் திடீரென மோதல் வெடித்தது.‌ இந்த மோதலில் பலருக்கும் அடி உதை என விழுந்ததால் பலரது மூக்குகள் உடைந்து ரத்தம் வழிந்தது. அதோடு கட்டையாலும் தாக்கிக்கொண்டனர்.

இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மோதலில் ஈடுபட்ட கோஸ்டியை உடனே பிரித்து அங்கிருந்து கலைத்தனர். இந்நிலையில் நிலமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அந்த  பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் அடிதடி சண்டையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |