நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பீஸ்ட்டை தூக்கக் கூடாது என தியேட்டர் உரிமையாளர்களுக்கு மிரட்டல் வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கேஜிஎஃப் 2 மிகுந்த வரவேற்ப்பை பெற்று வருவதால் பீஸ்ட் படத்தை எடுத்துள்ள தியேட்டர் உரிமையாளர்கள், கே ஜி எஃப் 2 படத்தை திரையிட்டு வருகின்றனர். இதனால் பீஸ்ட் படத்தை திரையரங்குகளில் இருந்து தூக்க கூடாது, அப்படி தூக்கினால் அடுத்தடுத்து ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள படங்களை தர முடியாது என்று சிலர் மிரட்டுவதாக சமூக வலைதளங்களில் புகார் எழுந்துள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
Categories
Beast-ஐ தூக்கினால் அவ்வளவுதான்…. Theaterகளுக்கு பகீர் மிரட்டல்…. பரபரப்பு…!!!
