பட்டப் பகலிலேயே கரடிகள் குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் காட்டெருமை, கரடி, சிறுத்தை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் பகல் நேரத்திலேயே அப்பகுதியிலுள்ள குடியிருப்புகளுக்குள் கரடி புகுந்து விட்டது.
இதனையடுத்து ஊரடங்கு சமயத்தில் அனைத்து மக்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கி விட்டதால் பகல் நேரங்களிலேயே அப்பகுதியில் கரடிகள் உலா வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.