Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கடைகளை உடைத்த கரடி…. அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…. வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்…!!

கரடியின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அதிகாலை கரடி ஒன்று இப்பகுதிக்குள் புகுந்து விட்டது. இந்த கரடி அங்கிருந்த இரண்டு கடைகளை உடைத்து பழங்களைத் தின்றதோடு, விளக்கில் இருந்த எண்ணையை குடித்து விட்டு சென்றுள்ளது. இதனையடுத்து அங்கிருந்த பேருந்து நிலையம் அருகில் இருக்கும் புதருக்குள் பதுங்கியிருந்த கரடி மதியவேளையில் மீண்டும் வெளியே வந்துள்ளது.

இதனை பார்த்ததும் பொதுமக்கள் அச்சத்தில் அலறி சத்தம் போட்டுள்ளனர். அதன்பின் பொதுமக்களின் சத்தம் கேட்டு கரடி அங்கிருந்து சென்று விட்டது. இதனைத் தொடர்ந்து புதரிலிருந்து நள்ளிரவு நேரத்தில் மீண்டும் வெளியே வந்த கரடி அங்கிருந்த கடையில் உள்ள பழங்களை ருசித்துள்ளது. இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

Categories

Tech |