முருங்கைக்கீரை இயற்கையாகவே ஆரோக்கியம் குணங்களைக் கொண்டது. இந்த கீரையில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் உள்ளது.
கீரையை பறித்து, பதில் தேவையான அளவு உப்பு மிளகுத்தூள் சேர்த்து 10 முதல் 20 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து 20 நிமிடம் கழித்து முருங்கைக்கீரை சூப் போன்ற பதத்திற்கு வந்தவுடன் அதை பருகி வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.
இதனை தினமும் குடித்து வந்தால் சளி. உடல் வலி போன்ற நோய்கள் நம்மை நெருங்கவே அஞ்சும். மேலும் இந்த கொரோனா காலத்தில் ஏற்ற ஆரோக்கியமான குடிநீரும் இதுதான். இதனை தினமும் வழக்கமாகக் கொள்ளுங்கள்.
இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் எடை குறையும். நம் உடலில் முருங்கை சாறு ஊறுவதால் தோல் நோய் ஆகியவை ஏதாவது இருந்தால் தானாக சரியாகிவிடும்.
இதற்கு முருங்கைக் கீரைக்கு தோல் நோயை குணப்படுத்தும் குணம் உண்டு. இயற்கையாக முருங்கை இலையை நாம் சாப்பிடும் உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது தனியாகவும் சமைத்து சாப்பிடலாம்.
காய்கறிகளில் இருக்கும் வைட்டமின் விட முருங்கைக்கீரையில் இருக்கும் வைட்டமின் அதிகம். இதில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது.
அதனால் யாருக்கெல்லாம் உடலில் வைட்டமின் சி குறைபாடுகள் இருக்கிறதோ அவர்கள் கட்டாயம் முருங்கைக் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
முருங்கை கீரையில் அயன் சத்து உள்ளதால் எலும்புகள் வலிமை பெறும். சிலர் பார்க்கத்தான் குண்டாக இருப்பார்கள். அவர்கள் உடல் வலிமை கொஞ்சம் கூட இருக்காது.
அப்படிப்பட்டவர்கள் எலும்புகள் வலிமை இல்லாமல் இருக்கும். தினமும் முருங்கைக் கீரை சாப்பிடுவதால் எலும்பு வலிமை பெறும்.
காலையில் முருங்கை சாறு குடிப்பதால் ஆஸ்துமா போன்ற பெரிய நோய்களிலிருந்து கூட விடிவு பெறலாம். நாம் சாப்பிடும் உணவில் தான் நம் உடலின் ஆரோக்கியமும் உள்ளது. சாப்பிடும் உணவே ஆரோக்கியமான உணவாக தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.