Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கு… கடந்த வாரத்தை விட விலை உயர்வு… மும்முரமாக நடைபெற்ற ஏலம்…

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற வாழைத்தார் ஏலத்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் விலை சற்று உயர்வடைந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர்  காவிரி கரையோர பகுதியான குச்சிபாளையம், வெங்கரை, பொத்தனூர், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழைகள் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கு விளைவிக்கப்படும் வாழைத்தார்கள் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதனையடுத்து விவசாயிகள் பரமத்திவேலூரில் நடைபெறும் வாழைத்தார் ஏலத்திலும் நேரடியாக விற்பனை செய்வது வழக்கம்.

இதனைத்தொடர்ந்து நேற்று பரமத்திவேலூரில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றுள்ளது. அந்த ஏலத்தில் கற்பூரவள்ளி வாழைத்தார் அதிகபட்ச விலையாக 450 ரூபாய்க்கும், பூவன் வாழைத்தார் 400 ரூபாய்க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்ச விலையாக 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் பச்சநாடன் வாழைத்தார் அதிகபட்ச விலையாக 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மொந்தன் வாழைக்காய் ஓன்று 3 ரூபாய் வைத்து ஏலம் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் வாழைத்தார்களின் விலை சற்று உயர்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Categories

Tech |