பேட்ஸ்மேன்கள் போட்டியின்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கேப்டன் வார்னர் தெரிவித்துள்ளார்.
இந்த ஐபிஎல் சீசனில் நடைபெற்ற 3 போட்டிகளிலும் ,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதைப்பற்றி அணியின் கேப்டனான டேவிட் வார்னர் கூறும்போது, நடந்த போட்டிகளில் தோல்வி அடைந்தது மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளதாக தெரிவித்தார். நடந்து முடிந்த 3 போட்டிகளிலும், எதிரணியினர் சுலபமான இலக்கை தான் நிர்ணயித்தனர். ஆனால் எங்களுடைய பேட்டிங் சரியாக அமையாததால் ,தோல்வியை சந்தித்து வருகிறோம்.
பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைந்தால் 150 ரன்களை எளிதாக பெற முடியும். எங்களுடைய பேட்ஸ்மேன்கள் சாதுரியமாக, விளையாடுவது அவசியமாகும். இந்த தவறை செய்வதால்தான் தோல்வியை சந்தித்து வருகிறோம் என்று கூறினார். இதைத்தொடர்ந்து வில்லியம்சன் உடல்தகுதியை பற்றி உடல்தகுதி நிபுணரிடம் ஆலோசனை முடிந்து ,விரைவில் அணியுடன் இணையும்போது ,அணியில் மிகப் பெரிய பங்களிப்பை கொடுப்பார் , என்று கேப்டன் வார்னர் கூறினார் .