மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.
கொரோனா வைரஸ்சை கட்டுபடுத்த நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஒட்டுமொத்த வணிக வளாகங்கள், கடைகள் மூடப்பட்டுள்ளன. அந்த வகையில் டாஸ்மாக் மது கடைகளும் மூடப்பட்டது. இதனிடையே மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை பிறப்பித்தது.அதில், மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாநில அரசுகள் மதுக்கடைகளை திறந்தன. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை எனவே டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. மதுக்கடைகள் செயல்படுவதன் மூலம் தனிமனித இடைவெளி என்பது கேள்விக் குறியாகிறது,
இதனால் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதன் விசாரணை இன்று நடைபெற்ற போது, உச்சநீதிமன்றம் ‘இது சிஸ்டம் சார்ந்த விஷயம்’ என்பதால் தலையிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்த்ததோடு மனுதாக்கல் செய்த மனுதாரர் மீது ஒரு லட்சம் அபராதம் விதித்தது. இதை தொடர்ந்து தற்போது தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்று வருகின்றது.