பார் உரிமையாளரின் காதை கடித்த வழக்கில் ஒருவரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்து விட்டனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பி.என் ரோடு சாந்தி தியேட்டர் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடை அருகில் குட்டி என்பவர் பார் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இந்த பாரை ஏலம் எடுக்கும் விவகாரம் தொடர்பாக அவரது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவருக்கும் குட்டிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் போயம்பாளையம் அருகே உள்ள ஒரு பேக்கரி முன்பு குட்டி சென்று கொண்டிருந்த போது, அந்த இடத்திற்கு சென்ற ராஜா மற்றும் அவருடைய நண்பர்கள் குட்டியை பலமாக தாக்கியுள்ளனர்.
அப்போது குட்டியின் இரண்டு காதுகளையும் ராஜா, காளி போன்ற இருவர் கடித்து துப்பி விட்டனர். இச்சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தினேஷ்பாபு, தமிழ்செல்வன் தனபால் ஆகிய மூன்று பேரை கைது செய்து விட்டனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய காளி என்பவரை தற்போது காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.