Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

விஷயம் தெரிஞ்ச உடனே… கோபத்தில் கொந்தளித்த கிராம மக்கள்…. தலைமறைவான பார் ஊழியர்கள்…!!

பெட்டி கடைக்காரரை கத்தியால் குத்தியதால் பொதுமக்கள் இணைந்து மதுக்கடை பாரை சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைக்கு அருகில் ஒருவர் பார் வைத்து நடத்தி வந்துள்ளார் அதே கிராமத்தில் வசிக்கும் ராஜேஷ் என்பவர் மதுபான கடைக்கு எதிரே சிறிய பெட்டி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் மதுக்கடை பாரில் விற்கப்படும் தின்பண்டங்களின் விலையை விட குறைந்த விலையில் விற்பனை செய்வதால் மதுக்கடைக்கு வரக்கூடிய மது பிரியர்கள் பெட்டிக்கடைக்கு சென்றதால் பாரில் வியாபாரம் மிகவும் குறைந்து விட்டது. இதனால் கடைக்காரரிடம் பார் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது கோபமடைந்த பார் ஊழியர்கள் ராஜேஷை கத்தியால் குத்தி விட்டனர். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அறிந்த கிராம மக்கள் மதுக்கடை பாருக்கு சென்று அங்கிருந்த அனைத்து நாற்காலி மற்றும் மேசைகளை அடித்து நொறுக்கினர். இதனால் மது குடித்துக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பொன்னேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜேஷை கத்தியால் குத்திய பார் ஊழியர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |