Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

வங்கி தகவல் திருட்டு…. மிக மிக ஆபத்து….. 17 APPS-க்கு தடை….. கூகுள் அதிரடி….!!

தரவுகளை திருடுவதாக கூறி கூகுள் நிறுவனம் 17 செயலிகளுக்கு  தடை விதித்துள்ளது. 

சமீப நாட்களாகவே மக்களின் தரவுகளை திருட கூடிய அபாயம் இருப்பதாக கூறி பல செயலிகளை மத்திய அரசு தடை செய்து வருகிறது. கூகுள் நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய செயலிகளை தடை செய்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கூட பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து,

தற்போது கூகுள் நிறுவனம் தற்போது ஆபத்தான செயலிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஜோக்கர் என்ற மால்வேர் வைரஸ்களால் பாதிக்கப்பட்ட இந்த செயலிகள் வங்கி கணக்கு உள்ளிட்ட தகவல்களை திருடுவதாக தெரிவித்துள்ளது. அந்த செயலிகளின் பட்டியல் பின்வருமாறு, all google pdf scanner, mint leaf message, unique keyboard-fancy fonts & freeemoticons, tangram app lock, direct messenger, private sms, one sentence,translator,style photo collage,meticulous scanner,desire translate,talent photo editor, care message, part message, paper doc scanner, blue scanner, humming bird pdf converter, all good pdf scanner ஆகியவையாகும்.

Categories

Tech |