உங்கள் வங்கிக் கணக்குகளில் ஆன்லைன் ஹேக்கிங் மற்றும் மோசடி நடைபெற்று இருந்தால் பணத்தை திரும்ப பெற நுகர்வோர் ஆணையம் கூறும் வழிகாட்டுதலை இதில் பார்ப்போம்.
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் ஹேக்கிங் மற்றும் மோசடி என்பது அதிகமாக நிகழ்ந்து வருகின்றது. வாடிக்கையாளர்கள் வங்கிக்கு சென்று மோசடி புகார்களை அழிக்கும்போது பெரும்பாலான வங்கிகள் வாடிக்கையாளர்களின் செலுத்துவதில்லை. இதற்கு காரணம் வங்கிகளின் மின்னணு அமைப்பில் ஏற்பட்ட குறைபாடுதான் காரணமாக இருந்தாலும் அதற்கான இழப்பீடு தர மறுக்கிறார்கள். ஒரு பெண்ணிற்கு கிரெடிட் கார்டு மூலம் பணம் திருடப்பட்டதாக வழக்கு இருந்தது. அதில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க நுகர்வோர் கமிஷன் வங்கி உத்தரவிட்டிருந்தது.
வங்கி அமைப்பில் ஏற்பட்ட குறைபாடு காரணமாகவே வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு 29 க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் பெண்ணின் வங்கி கணக்கிலிருந்து மோசடி செய்த மூன்று லட்சம் ரூபாயை திரும்ப செலுத்துமாறு என்சிஇஆர்டி வங்கிக்கு அறிவுறுத்தியது. இதுகுறித்து 2009ஆம் ஆண்டில் மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், 2008 ஆம் ஆண்டு மோசடி நடந்ததாகவும், பெண் புகாரை கேட்டபோது திருடிய பணத்தையும், மன உளைச்சலுக்கு ஆளானதையும், சேர்த்து செலவழித்த பணத்தை வட்டியுடன் திருப்பி செலுத்துமாறு தனியார் வங்கிக்கு உத்தரவிட்டது.
இதன்படி 2017-18 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி, ஹேக்கிங் செய்தால் யார் பொறுப்பு என்று தெளிவு படுத்துவது தொடர்பாக விளக்கம் அளித்தது. யார் பொறுப்பு ஏற்பார்கள் என்பது யாருடைய தவறு என்பதை தீர்மானிக்கும். விதியின்படி, வங்கியின் தரப்பில் தவறுகள் இருந்தால் வாடிக்கையாளர்கள் கவலைப்படத் தேவையில்லை, முழு இழப்பீடும் வங்கியே ஏற்கும். ஆனால் வாடிக்கையாளர்களின் அலட்சியம் காரணமாக மோசடி ஏற்பட்டால் வாடிக்கையாளர் இழப்பை சந்திக்க நேரும். அது வங்கியின் தவறு அல்ல. வாடிக்கையாளர்கள் மோசடி நடந்த மூன்று வேலை நாட்களுக்குள் வங்கியில் புகார் அளித்தால், 4 முதல் 7 நாட்களுக்குள் பணம் திரும்பப் பெற முடியும். ஏழு நாட்களுக்குப் பிறகு மோசடிப் புகார் அளித்தால் அது ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளது.