வருகின்ற டிசம்பர் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் வங்கிகளில் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இந்த விதிகள் குறிப்பாக பணபரிமாற்ற தொடர்புடையவை எனக் கூறப்படுகிறது. இந்த புதிய விதியின் கீழ், இனி Real Time GrossSettlement (RTGS) காண வசதி 24 மணி நேரமும் கிடைக்கும் எனவும் RTGS மூலம் நிதிப் பரிமாற்றம் வேகமாக நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன் மூலம் குறைந்தபட்சம் ரூபாய் இரண்டு லட்சம் வரையிலான நிதியை பரிமாற்றம் முடியும். அதே போல், காலை 8 – 11 மணி வரை RTGS கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.