கரையைக் கடக்க துவங்கியது பானி புயல் ஒடிசாவில் இடைவிடாது பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில் இன்று ஒடிஸா மாநிலத்தின் புரி மாவட்ட தெற்கு கடலோரப் பகுதியின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலிக்கு இடையே கரையைக் கடக்க துவங்கியது. கரையை கடக்கும் போது, 1 மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்றும், இந்த புயல் காலை 8மணி முதல் 11மணி வரை கரையை கடக்கும் எனறும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த புயல் கரையைக் கடக்க துவங்கியதால் ஒடிசாவில் இடைவிடாது பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பானி புயல் ஒடிசாவில் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பானி புயல் இன்று கரையை கடப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநில அரசு பொது மக்களை நேற்றே வீடுகளில் இருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கபட்டுள்ளார்கள். 8 லட்சம் பேர் தன் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தங்கியுள்ளனர். மீட்புக்குழுவும் தயார் நிலையில் உள்ளனர்.