பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏலம் மையத்தில் குவிக்கப்பட்டுள்ள வாழைதார்களை வியாபாரிகள் வாங்கி சென்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வாழைத்தார் ஏலம் மையமானது திருக்காட்டுப்பள்ளி மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார கிராம பகுதிகளிலிருந்து விவசாயிகள் வாழைத்தார்களை வெட்டிக் கொண்டுவந்து இந்த ஏல மையத்தில் வைத்து ஏலம் விடுவர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் வாழைத்தார்களை கொண்டுவந்து இந்த ஏல மையத்தில் குவித்துள்ளனர்.
இதனையடுத்து காலை 10 மணியிலிருந்து வாழைத்தார்கள் ஏலம் துவங்கப்பட்ட நிலையில், பச்சை நாடன், ரஸ்தாளி, பூவன் போன்ற வாழை ரகங்கள் அதிகளவில் வந்திருந்தன. இதை பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி விற்பனைக்கு எடுத்துச் செல்கின்றனர். வருகின்ற பொங்கல் பண்டிகை வரை இங்கு ஏலம் நடைபெறும் என வியாபாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.