சுவையான வாழைப்பூ பக்கோடா செய்யலாம் வாங்க ..
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ – 1
பெரிய வெங்காயம் – 3
கடலை மாவு – 2 கப்
மிளகாய்த் தூள் -1 தேக்கரண்டி
சோள மாவு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – தேவையானஅளவு
எண்ணெய் – 200 மில்லி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
வாழைப்பூவை பொடிப்பொடியாக நறுக்கி சிறிது மோர் கலந்த தண்ணீரில் போட்டு ஊறவிட்டு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும் .பின் நறுக்கிய வெங்காயத்தையும், கருவேப்பிலையும் அதனுடன் சேர்த்து ,அதில் கடலைமாவு, சோளமாவு, மிளகாய்த்தூள், உப்பு போட்டு லேசாக தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள கலவையை பரவலாகப் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்து பரிமாறினால் சுவையான வாழைப்பூ பக்கோடா தயார் ..!!